`எனது உண்மையான குழந்தை எங்கே?- அரசு மருத்துவமனையில் போராடும் தாய்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகக் கூறிவிட்டு பெண் குழந்தையை மாற்றிக் கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருடப்படும் சம்பவங்கள் சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ச்சியாக நடந்தன. அதில் ஒரு வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது. அதற்குப் பின் மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பல இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 25ம் தேதி பள்ளப்பட்டியைச் சேர்ந்த ராணி என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்று மாலையே அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. முதலில் ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகக் கூறிய செவிலியர்கள், சிறிது நேரத்தில், பெண் குழந்தையைத் தாயின் கையில் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ராணி, தனது உண்மையான குழந்தை எங்கே என்று கேட்டதற்கு  செவிலியர்கள் சரியான பதிலைக் கூறவில்லை.

இதற்கிடையே அவரை  டிஸ்சார்ஜ் செய்து வெளியே அனுப்ப முயற்சி செய்த நிலையில் கடந்த 9 நாள்களாக மருத்துவமனைக்கு உள்ளேயே அமர்ந்து போராட்டம் செய்து வந்துள்ளார். இந்த விஷயம் வெளியே செல்லாத வகையில் பல்வேறு விதங்களில்                              மருத்துவமனையில் சிலர் அவரை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தனது உண்மையான குழந்தை எதுவென்று தெரியாமல் மருத்துவமனையை விட்டுச் செல்லமாட்டேன் என ராணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த விவகாரத்தை மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!