தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கி 3 சிறுவர்கள் பலி! - சுற்றுலா வந்தபோது நேர்ந்த சோகம்.

தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா செலுவை கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் இன்று ராமேஸ்வரத்துக்குச் சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா வந்த அனைவரும் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றுவிட்டு தனுஷ்கோடி வந்துள்ளனர். அங்கு அரிச்சல்முனை கடல் பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது 3 குழந்தைகள் கடல் அலையில் சிக்கினர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தினால், அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர் கூச்சலிட்டபடி குழந்தைகளை மீட்க முயன்றனர். ஆனால், ஒரு குழந்தையைக் கூட அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. செலுவைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் இன்பத்தமிழன் (12), கோனேரி கோட்டையைச் சேர்ந்த ஜெகநாதன் மகள் இனிதா (10) மற்றும் பூமிநாதன் மகள் சுவேதா (11) ஆகிய 3 குழந்தைகளும் உயிரிழந்தனர். இதில் சிறுவன் இன்பத் தமிழன் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்ற இரு குழந்தைகளின் உடலையும் போலீஸார் மற்றும் மீனவர்கள் தேடி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!