வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (05/05/2018)

கடைசி தொடர்பு:23:00 (05/05/2018)

க்ரைம் த்ரில்லர் படத்தில் ஹன்சிகா!

அறிமுக இயக்குநர் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் வழக்கமான கதைகளைத் தாண்டி அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து, ஹன்சிகாவும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை ஆர்வமாகக் கேட்டு வந்துள்ளார்.

ஹன்சிகா

அதில் `ரோமியோ ஜூலியட்', `போகன்' ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ஜமீல் சொன்ன கதை அவருக்குப் பிடித்துவிட்டதாம். அதனால், ஜமீல் படத்தில் நடிக்க ஹன்சிகா முடிவெடுத்து விட்டார். இதுரை ஹன்சிகா நடித்ததிலிருந்து இந்தப் படம் மாறுபட்டதாக இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு இந்தியா, ஐரோப்பா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறது படக்குழு. ஜியோ ஸ்டார் என்டர்ப்ரைசர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான பெயரும், மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் பட்டியலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க