முதல்வர் பழனிசாமி, ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒரே நபர்! | Bomb threat given to chief minister and rajinikanth house

வெளியிடப்பட்ட நேரம்: 23:37 (05/05/2018)

கடைசி தொடர்பு:23:37 (05/05/2018)

முதல்வர் பழனிசாமி, ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஒரே நபர்!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி மற்றும் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் இல்லம்

தமிழக முதல்வரின் வீடு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ளது. இன்று மாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனால் முதல்வர் வீட்டுக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேநேரத்தில் மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது. 

நடிகர் ரஜினிகாந்தின் வீடு சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த ரஜினிகாந்த் இன்று அதிகாலை வீடு திரும்பினார். நாடு திரும்பியதும் தீவிர கட்சி பணிகளில் ஈடுபட இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை காவல்துறையின் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசியில் ரஜினிகாந்த் வீட்டுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. 

முதல்வர் பழனிசாமி மற்றும் நடிகர்  ரஜினிகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் இருவர் வீட்டுக்கும் மிரட்டல் விடுத்த நபர் ஒருவரே என்ற தகவல் வெளியாகியுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.