பழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்! | An fruit seller says fuel price was the reason behind the price hike of fruits

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (06/05/2018)

கடைசி தொடர்பு:01:30 (06/05/2018)

பழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்!

Fruits Price

அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்க, தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்கிறது.  வெயிலின் வெப்பம் தணிக்க இளநீர் அருந்தலாம் என்றால், தற்போது கிராமங்களில்கூட இளநீர் விலை எகிறிவிட்டது.  பழங்கள், பழச்சாறு அருந்தினால் உடல் சூட்டுக்கு நலம் என்று கூறுகிறார்கள்.  எனவே, பழங்களை வாங்கப் பழக்கடைகளை நாடினால் பெரும்பாலான பழங்களின் விலை கிலோ ஒன்று நூறு ரூபாய்க்கு மேல் தான் விற்கப்படுகிறது. இவை ஏழைகளுக்கு எட்டாதக் கனியாக ஆகிவிட்டதற்கு என்னக் காரணம்? 

பழங்கள்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பழக் கடைக்காரர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம், ”தமிழ்நாட்டில் பழங்களின் உற்பத்தி அதிகமாக இல்லை.  வெளிமாநிலங்களிலிருந்து தான் பழங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.  அங்குப் பழங்களின் விலை குறைவாகத்தான் இருக்கிறது.  ஆனால், அதனைக் கொண்டுவரும் போக்குவரத்துச் செலவுதான் அதிகமாக இருக்கிறது.  காரணம், டீசல், பெட்ரோல் விலை உயர்வுதான்.  

எண்ணெய் நிறுவஙனங்களின் கையில் டீசல், பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யக் கொடுத்துவிட்டார்கள்.  அவர்கள் தினமும் டீசல் பெட்ரோல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.  அவற்றின் மீது மத்திய அரசம், மாநில அரசும் போட்டிப் போட்டுக்கொண்டு வரி வசூலிக்கிறார்கள்.  இந்த விலையேற்றம் எல்லாம் ஏழைகள் தலையில்தான் விழுகிறது.  இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அதனால்தான் பழங்களின் விலையைக் கூட்டி விற்கவேண்டி உள்ளது.  அப்படி விற்றால்தான் எங்கள் பிழைப்பு ஓடும்.  ஆனால், பழங்களை வாங்கும் மக்கள், வசைபாடிக் கொண்டேதான் செல்கிறார்கள்.  இதைப்பற்றி நாட்டை ஆள்பவர்களுக்குக் கவலையில்லை.  நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்றார் அவர்.  


[X] Close

[X] Close