''குட்கா விற்பவர்களை அச்சுறுத்தக்கூடாது'' வணிகர் தின மாநாட்டில் அடடே தீர்மானம் | Don't threat gutkha sellers; trade association passed new resolution

வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (06/05/2018)

கடைசி தொடர்பு:05:15 (06/05/2018)

''குட்கா விற்பவர்களை அச்சுறுத்தக்கூடாது'' வணிகர் தின மாநாட்டில் அடடே தீர்மானம்

வணிகர் மாநாடு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 35-வது ஆண்டு வணிகர் தினம், மே 5-ம் தேதி(நேற்று) சென்னை வேலப்பன்சாவடி-யில், ''இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடு-2018'' என்ற பெயரில் நடந்தது. தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.மோகன் தலைமையில் மாநில துணைத்தலைவர் வி.அய்யாத்துரை வணிகக் கொடியை ஏற்றினார். அதன் பின்பு, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளை மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல் தலைமையில் மாநில துணைத் தலைவர் பி.தங்கபெருமாள் தொடக்கி வைத்தார். பின்னர், மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டுத் தீர்மானங்களை பொருளாளர் சதக்கத்துல்லா வாசித்தார். அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், அரசியல் கட்சித் தலைவர்கள் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், ஜவாஹிருல்லா, கமல் உள்படப் பலர் கலந்து கொண்டார்கள்.

''சாலையோரக் கடைகள் எவ்வித உரிமமும் இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமலும் அரசுக்கு வரி இழப்புகளை ஏற்படுத்தியும் வருகின்றன. அவற்றை உரிமம் அளித்து முறைப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் உள்ள இ-வே பில்லை எளிமைப்படுத்த வேண்டும். அனைத்து வணிகர்களுக்கும் பயன் கிடைக்கும் வகையில் முத்ரா வங்கித் திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண உயர்வை நீக்க வேண்டும். அவசியமற்ற கடையடைப்புகளைத் தவிர்க்க வேண்டும். வணிகர் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு, வணிகர்களுக்கு ஓய்வூதியம் தர வேண்டும். வணிகர் நல வாரியத்தைச் சீரமைக்க வேண்டும்.

டீசல், பெட்ரோல் எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். காந்தியடிகளின் 150-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவர் விரும்பிய காதிகிராமோத் தொழில் மேம்பாடு அடையப் பனை மரங்களைப் பாதுகாத்து பனை பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். கட்டுமானத் தொழில் செழிக்க, நிலத்தடி நீரைப் பெருக்க, அயல்நாட்டு மணல் இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் விற்பனைக்குத் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள், உடல் நலக்கேட்டினை விளைவிக்கும் புகையிலைப் பொருட்கள் போன்றவற்றை உற்பத்தி நிலையிலேயே தடை செய்ய வேண்டும். 

சில்லரை விற்பனையாளர்களுக்கு அதிகாரிகளால் எவ்வித அச்சுறுத்தலும் இருக்கக்கூடாது. அதாவது, விற்பனைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பு நிலையிலேயே தடை செய்திட வேண்டும்'' என்பது உள்பட மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க