வெளியிடப்பட்ட நேரம்: 08:17 (06/05/2018)

கடைசி தொடர்பு:09:03 (06/05/2018)

நீட் தேர்வு..! கடுமையான சோதனைகளுடன் மாணவர்கள் தேர்வு அறைக்கு அனுமதி

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்றவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த‍த் தேர்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இந்த‍த் தேர்வுக்காக நாடு முழுவதும் 2,255 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட் ஏ-பிரிவு, பி-பிரிவு என்று வழங்கப்பட்டுள்ளது.

ஏ-பிரிவு மாணவர்கள் காலை 7.30 மணி முதல் தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். காதணிகள், கொலுசுகள் அணிந்திருந்த மாணவிகள், அவற்றை கழற்றிய பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான சோதனைகள் கடுமையாக நடைபெற்றுவருகிறது. 

கலாச்சாரம் சார்ந்த உடைகள் அணியும் மாணவர்கள் 8.30 மணிக்கே தேர்வு அறைக்கு வரவேண்டும். தமிழகத்தில் 170 மையங்களில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க