20 சென்டர்..! 11,800 மாணவர்கள்..! மதுரை நீட் !

நீட் தேர்விற்கு அதிகமான அளவிற்கு கோச்சிங் எடுத்து வந்துள்ளதால் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெறுவோம் என மதுரையில் நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நீட்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடந்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் 20 மையங்களில் 11 ஆயிரத்து 800 மாணவ - மாணவிகளுக்கு தேர்வு எழுதிவருகின்றனர். மதுரையில் உள்ள மையங்களில் பெரும்பாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே தேர்வு எழுதுகிறார்கள். பல்வேறு சிரமங்களுடன் காலையிலேயே தேர்வு மையங்களுக்கு மாணவ - மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் வந்து சேர்ந்தனர். பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், பெற்றோர்கள் தேர்வு மையங்களுக்கு வெளியே காத்திருக்கின்றனர். தேர்வு எழுத வந்திருந்த மாணவ - மாணவிகள் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது மாநில கல்வி திட்டத்தின் கீழ் படிப்பவர்களும், மெட்ரிகுலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களும் நீட் தேர்விற்காக அதிகமான அளவு கோச்சிங் எடுத்துள்ளதால் தேர்வில் வெற்றி பெறுவோம் என தெரிவித்தனர். மதுரையில் நீட் தேர்வு நடைபெறுவதால் அதிகாலையிலேயே பல்வேறு இடங்களில் சிறிய அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!