நீட் தேர்வு: மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை.!

கோவையில் நீட் தேர்வு எழுதவந்த மாணவர்களின் காதுகளுக்குள் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டது.

நீட்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு தொடங்கியுள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற பகுதிகளில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், நெல்லை உள்ளிட்ட 10 இடங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

இதில், கோவையில் மட்டும் 32 மையங்களில்  தேர்வு நடக்கிறது. கோயம்புத்தூரில் மட்டும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதுகின்றனர். கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளின், தலைகளில் போடப்பட்டிருந்த ஹேர் பேண்டுகள் எடுக்கப்பட்டன. அதேபோல, மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த  கயிறுகள், ஸ்டைல் பேண்டுகள், பெல்ட்டுகள் போன்றவைகளும் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தேர்வு எழுத வந்த மாணவர்களின் காதுகளில் டார்ச் லைட் அடித்து சோதனை செய்யப்பட்டது. ஆனால், மாணவிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!