நீட் தேர்வு : தமிழக மாணவர்களுக்கு தமிழிசை வாழ்த்து

இன்று தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழிசை

மருத்துவ மாணவர் நுழைவுத் தேர்வான நீட் இன்று நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருகிறது. இதை இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் 170 தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 12 மையங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர். 

தமிழகத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் “ தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் 1,07,288 மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவிதம் அதிகரித்துள்ளது. இது, மருத்துவப் படிப்பை முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் கோடிக்கணக்கான, லட்சக்கனக்கான ரூபாய் பணம் செலவு செய்யாமல் மாணவர்கள் படிப்பதற்கு மோடி அரசு மேற்கொண்டுவரும் முயற்சியின் மீது மாணவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கான ஆதாரம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!