வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (06/05/2018)

கடைசி தொடர்பு:09:31 (07/05/2018)

நீட் தேர்வு: பதைபதைப்பில் காத்திருக்கும் பெற்றோர்!

நீட் தேர்வு தொடங்கிய நிலையில், தங்களுடைய பிள்ளைகள் சிறப்பாக தேர்வு எழுத வேண்டுமே என்கிற பதைபதைப்பில் பெற்றோர் உள்ளனர்.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவக் கல்விக்கான நீட் தகுதித் தேர்வு 10 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக, 9.30 மணிக்குள் அனைத்து மாணவர்களும் தேர்வு மையத்துக்குள் சென்று விட்டனர். தங்களது பிள்ளைகள் தேர்வு மையத்துக்குள் சென்றுவிட்ட நிலையில், அவர்களுடன் வந்திருந்த பெற்றோர், தேர்வு மையங்களின் வளாகத்திலேயே பதற்றத்துடன் காத்திருக்கிறார்கள்.

கேரளாவின் எர்ணாகுளம் நகரில் உள்ள மையங்களில் தமிழகத்தில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அவர்களுடன் வந்திருந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகள் சிறப்பான முறையில் தேர்வு முடித்து வெளியே வரக் காத்திருக்கிறார்கள். 

இதனிடையே, எர்ணாகுளம் நகரில் உள்ள ஹோட்டல்கள், மதியம் ஒரு மணிக்கு செக்-அவுட் நேரமாக வைத்துளதால், பல பெற்றோர் காலையிலேயே ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு பைகளுடன் வந்து தேர்வு மைய வளாகத்தில் காத்தி நிற்கிறார்கள். பல பெற்றோர் திரும்பிச் செல்வதற்கு பேருந்து அல்லது ரயில்களில் முன்பதிவு செய்யாத நிலையில் உள்ளனர். தேர்வுக்காக வரும்போது சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், திரும்பிச் செல்லும்போது அந்தப் பேருந்துகள் இயக்கபடுமா? என்பது தெரியாததால் தவிப்பில் இருக்கிறார்கள்.