வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (06/05/2018)

கடைசி தொடர்பு:13:34 (06/05/2018)

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள்..! நீட் தேர்வு மாணவர்கள் வேதனை

நீட் தேர்வு பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ பாடப் பிரிவிலிருந்தே கேட்கப்பட்டதாக மாணவர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் 13 லட்ச மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகம் முழுவதும் 10 மாவட்டங்களில் 170 தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு வினாத்தாள் குறித்து தெரிவித்த மாணவர்கள், 'பெரும்பாலான வினாக்கள் சி.பி.எஸ்.இ பாடப் திட்டத்திலிருந்தே கேட்க்கப்பட்டுள்ளது. அதனால், தேர்வை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. மாநில பாடத் திட்டத்தில் படிப்பவர்களும் சிரமமாக இருந்தது' என்று தெரிவித்தனர்.