`சிபிஎஸ்இ.க்கு யார் தண்டனை அளிப்பது?’ - கொதிக்கும் பெற்றோர்

"ரெண்டு நிமிடம் தாமதமாக சென்றாலே தேர்வு கூடத்துக்குள்  அனுமதிக்காமல், மூக்குத்தி, கம்மலை கழற்ற சொல்லி  மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் சி.பி.எஸ்.இ., கேள்வித்தாளை மாற்றி கொடுத்து மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி மிகப்பெரிய கொடுமை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது என்று பெற்றோர்கள் கொதித்துப்போய் கேட்டனர்.

சிஎபிஎஸ்இக்கு எதிராகப் போராட்டம்

நீட் தேர்வு எழுத மதுரை நரிமேட்டில் இருக்கும் நாய்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவர்களில் 120 பேருக்கு ஆங்கில வினாத்தாளுக்கு பதிலாக இந்தி வினாத்தாளை வழங்கிய கொடுமை நடந்தது. இந்த விவகாரத்தை வெளியில் தெரியாமல் மறைக்கப் பார்த்தனர். இந்தநிலையில், 24 மாணவர்களுக்கு மட்டும் ஆங்கில வினாத்தாளை வழங்கி மதியம் 12 மணிக்கு தேர்வு எழுத வைத்துள்ளனர். மீதியுள்ள 96 மாணவர்களை ஒரு வகுப்பறையில் அமர வைத்திருந்து, பின்பு வினாத்தாள் வரவழைக்கப்பட்டு மதியம் 3 மணிக்கு தேர்வு எழுத வைத்தனர். அவர்கள் மாணவர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுத்தாலும், பல மாணவர்கள் அதை சாப்பிடவில்லை. உற்சாகமாக வந்த மாணவர்கள், தாமதமாக தேர்வு எழுதியதால் மிகவும் மனச்சோர்வு அடைந்தனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. யின் மோசமான இந்த செயலை கண்டித்து எஸ்.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த மாணவர்கள், செல்வா தலைமையில் நாய்ஸ் பள்ளி முன் ஆர்பாட்டம் நடத்தினார்கள். பின்பு அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

’மாணவர்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்த சி.பி.எஸ்.இ.தேர்வு துறை, தாங்கள் அலட்சியமாக இருந்தது எப்படி?. சிறு தாமதத்துக்கு கூட தேர்வு எழுத அனுமதிக்காதவர்கள் இவ்வளவு பெரிய தவறை செய்ததற்கு என்ன தண்டனை?. அவர்களுக்கு தண்டனை யார் வழங்குவது?’ என அங்கு வந்திருந்த பெற்றோர்கள் கொந்தளித்துப் போய் கேட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!