பரட்டைத்தலையுடன் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகள்! - பெற்றோர் வேதனை

நீட் தேர்வு மையம்

நீட் தேர்வு எழுதவரும் மாணவிகளின் தலையைக் கோதிவிட்டுக் காண்பிக்கச் சொன்னதால், மதுரை மாணவிகள் பரட்டைத்தலையுடன் தேர்வெழுதச் சென்ற சம்பவம், பொதுமக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடைபெற்றது. மாணவ மாணவிகள்,  பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வு  அறைக்குச் சென்றனர். நாடு முழுவதும் 13.26 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் உள்ள 170 மையங்களில், மொத்தம் 1,07,288 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில், மதுரையில் 20 மையங்களில் 11,800 பேருக்கு தேர்வு எழுத நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன . கண்காணிப்பாளர்களுக்கு மட்டும் 500 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 6 பறக்கும் படை குழுக்களும், 20 தலைமை அதிகாரிகளும் மதுரை மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேர்வு அறைக்குள் நுழையும் மாணவிகளின் தோடு, வளையல், வாட்ச், ஹேர்பின், ஜடைமாட்டி உள்ளிட்டவற்றை வெளியே வைக்கச் சொல்லி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால், தலையைக் கலைத்து விட்டு பரட்டைத்தலையுடன் மாணவிகள் தேர்வுக்குச் சென்றதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!