முதல்வர், துணை முதல்வருக்கு எதிராகப் போராட்டம் - மதுரை நந்தினி அறிவிப்பு!

ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்ட வரும் முதலமைச்சர் எடப்பாடி, துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்போவதாக, மதுரையைச் சேர்ந்த நந்தினி ஆனந்தன் அறிவித்துள்ளார்.

மதுரை நந்தினி

சென்னை மெரினா கடற்கரையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை காலை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்.

50 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில்  நினைவு மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கு எதிராகப் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், அரசு அதைப்பற்றி கண்டுகொள்ளாமல், அதன் அடிக்கல் நாட்டு விழாவை நாளை நடத்துகிறது. 
இந்த நிலையில், மெரினாவுக்கு நாளை வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு எதிராகப் போராட்டம் நடத்த உள்ளதாக மதுரை நந்தினி அறிவித்துள்ளார்.

"டாஸ்மாக் படு கொலைகள், நீட், காவிரிப் பிரச்னையில் தமிழக மக்களுக்குத் துரோகம், ஆளத் தகுதியற்ற  ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அரசின்  அடிமை ஆட்சியை அகற்ற  நாளைய தினம்  மெரினா வரும் அவர்களுக்கு, முன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!