ஃபீனிக்ஸ் பறவைபோல ஜெயலலிதா நினைவு மண்டபம்..! அடிக்கல் நாட்டிய முதல்வர்

சென்னை மெரினா கடற்கரையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து அடிக்கல் நாட்டினர். 

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவடத்துக்குப் பின் பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இன்று, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

இந்த விழாவில் அமைச்சர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். இந்த நினைவிடம், ஃபீனிக்ஸ் பறவை போன்ற வடிவத்தில் அமைக்கப்பட உள்ளது. அதன் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த நினைவு மண்டபம், 50 கோடி ரூபாய் செலவில் 36,806 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!