சித்திரை மாத திருவோண நட்சத்திர நடராஜர் அபிஷேகம்!

ஆனந்த மயமாக அனவரதமும் ஆடிக்கொண்டிருப்பவர் ஸ்ரீநடராஜர்.  பிரபஞ்சத்தை இயக்கும் அந்த நாட்டியத்தால்தான் சகல ஜீவன்களும் தோன்றியது என்கிறது வேதம். ஓயாத அந்த நாட்டியத்தின் காரணமாக, நடராஜப் பெருமானின் அங்கத்தைக் குளிர்விக்க தேவாதிதேவர்களின் ஆறுகால பொழுதுகளில் அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. 

நடராஜர் அபிஷேகம்

மானிடர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இதனால், ஆறுகால பூஜையை அவர்கள் நாள்தோறும் செய்துவருகிறார்கள். அதன்படி, சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் இன்று செய்யப்படும் அபிஷேகம், உச்சி கால அபிஷேகம் எனப்படும். நடராஜப் பெருமானின் தோற்றத் தலமான சிதம்பரத்தில், இன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அப்போது பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் குளிரக்குளிர நடராஜத் திருமேனிக்கு அபிஷேகிக்கப்படும். பின்னர், மகா தீபாராதனை செய்விக்கப்பட்டு, நடராஜர் அலங்கரிக்கப்படுவார். ஆண்டுக்கொரு முறை வரும் சித்திரை உச்சி கால அபிஷேகத்தைத்  தரிசித்தால், பிறப்பிலா பேரின்ப நிலையை எட்டலாம் என்பார்கள், ஆன்மிகப் பெரியோர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!