500 கிலோவாட் சூரிய மின்சக்தி ஆலை அமைப்பு – தூத்துக்குடி துறைமுகத்துக்கு விருது

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மேற்கூரையில் 500 கிலோவாட் சூரிய மின்சக்தி ஆலை நிறுவியதற்காக தமிழ்நாடு எரிசக்தி முகமை, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த விருதை வழங்கி உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மேற்கூரையில் 500 கிலோவாட் சூரிய மின்சக்தி ஆலை நிறுவியதற்காக தமிழ்நாடு எரிசக்தி முகமை,  2017-ம் ஆண்டுக்கான சிறந்த விருதை வழங்கி உள்ளது. 

award recceived from minister thangamanai

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களை விடவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் கடற்கரை நுழைவு வாயிலாம், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் இத் துறைமுகம் ஏற்றுமதி, இறக்குமதி, சரக்கு கையாளுதல் என பலவகைகளிலும் சிறப்பிடம் பெற்று வருகிறது. தற்போது, துறைமுகத்தில் மேற்கூரையில் 500 கிலோவாட் சூரிய மின்சக்தி ஆலை நிறுவியதற்காக தமிழ்நாடு எரிசக்தி முகமை, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த விருதைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியப் பெருந்துறைமுகங்களில்  வ.உ.சிதம்பரனார் துறைமுகம், மேற்கூரை சூரிய மின்சக்தி ஆலை அமைப்பதில் சிறந்து விளங்கி வருகிறது. மேலும், மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் படி, ரூ.4.78 கோடி செலவில் 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலையானது, துறைமுகப் பகுதியில், துறைமுக நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை, துறைமுக மருத்துவமனை, துறைமுகப் பள்ளிகள்,  கூடுதல் கப்பல் சரக்குத் தளம், துறைமுகப் பட்டறை, பல்நோக்கு அரங்கம் மற்றும் துறைமுக வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு அறைக் கட்டடம் ஆகிய இடங்களில் 5,530 சதுர மீட்டர் பரப்பளவில், 1,779 சட்டங்கள் (panels) நிறுவப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின்  சூரிய மின்சக்தி மூலம் ஒரு மாதத்துக்குத் தோராயமாக 58,171 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. துறைமுக நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி ஆலை நிறுவப்பட்டுள்ளதால் ஒரு வருடத்துக்கு 476 மெட்ரிக் டன் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை, வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் சார்பில், துறைமுகத்தின் துணைத் தலைவர் நடராஜன் பெற்றுக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை தேர்வு செய்து புகழ்பெற்ற இந்த விருதை வழங்கி கெளரவித்துள்ளது. இதை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி  வழங்கினார். இந்த விருதுக்குச்  சான்றாக, பச்சை ஆற்றலை அதிகம் பயன்படுத்தும் விதமாக இத்துறைமுகம் சுற்றுபுறச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!