வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (07/05/2018)

கடைசி தொடர்பு:12:47 (07/05/2018)

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்..! - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்துள்ளது. 

மே மாதம் 3-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில், மே மாதத்துக்குள் கர்நாடக அரசு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டு மே 8-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. இந்தநிலையில், இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு 4 டி.எம்.சி நீர் கொடுக்க இயலாது என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இது தமிழக அரசுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இந்தநிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், `காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க உத்தரவிட வேண்டும். மே மாத இறுதிவரை செல்லாமல் 4 டி.எம்.சி தண்ணீரை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.