வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (07/05/2018)

கடைசி தொடர்பு:14:23 (07/05/2018)

'காரில் 3,000; விமானத்தில் 1,940'- புதுச்சேரி டு சென்னை விமான சேவை தொடங்குகிறது

புதுச்சேரி விமான நிலையம்

புதுச்சேரியிலிருந்து சென்னை மற்றும் சேலத்துக்கு, ஜூலை 15-ம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் 45 நிமிடத்தில் சென்னை மற்றும் சேலத்துக்குச் சென்றடையலாம்.

புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து தற்போது, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை அளித்துவருகிறது. இந்நிலையில், வரும் ஜூலை 15-ம் தேதி முதல் சென்னை மற்றும் சேலத்துக்கு புதிய விமான சேவையைத் தொடங்க உள்ளது, ஏர் ஒடிஷா நிறுவனம். பயணத்துக்கான முன்பதிவையும் www.airodisha.com என்ற தனது இணையதளத்தின் வாயிலாகத் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம், காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மீண்டும், மதியம் 1.15 மணிக்கு புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சென்னையைச் சென்றடையும்.

அதேபோல, காலை 9.10  மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம், காலை 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும், மதியம் 12.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு புதுச்சேரி வந்தடையும்.

கட்டண விவரம்:
1. சென்னை - புதுச்சேரி ரூ.1,940.
2. புதுச்சேரி - சென்னை ரூ.1,470.
3. புதுச்சேரி - சேலம் ரூ.1,550.
4. சேலம் - புதுச்சேரி ரூ.1,550.

பொதுவாக, வாடகைக் காரில் சென்னைக்குச் செல்ல வேண்டுமென்றால் 3,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயண நேரமும் 3 மணி நேரத்துக்கு மேலாகும். தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தப் புதிய விமான சேவையின்மூலம் குறைந்த கட்டணத்தில் 45 நிமிடங்களில் சென்னைக்குச் சென்றுவிடலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க