Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மா கேரக்டரான்னு கேக்காதீங்க.. அந்த சீரியல்ல இனி ஹீரோயினே நான்தான்! - ஶ்ரீத்திகா

'நாதஸ்வரம்', 'குலதெய்வம்' என சன் டிவி சீரியல்களில் தொடர்ந்து பயணித்து வந்த ஶ்ரீத்திகா முதன்முறையாக விஜய் டி.வி பக்கம் வந்திருக்கிறார். 'கல்யாணமாம் கல்யாணம்' தொடரில் ஹீரோவின் அம்மாவாக என்ட்ரி தந்திருக்கிறார்.

ஶ்ரீத்திகா

'சீரியல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தவர், திடீரென அம்மாவாக எப்படி?' என்று கேட்டதற்கு, ''சினிமா மாதிரி டி.வியிலயும் மார்க்கெட் இறங்கிடுச்சுன்னா அம்மா கேரக்டர் தந்திடுவாங்கன்னு நினைச்சிடாதீங்க. முக்கால்வாசி சீரியல்கள்ல அம்மா, மாமியார் ரோல்கள்தான் வெயிட்டா இருக்கும். 'கல்யாணமாம் கல்யாணம்' தொடர்லயும் நான் இப்ப அறிமுகமாகியிருக்கர கேரக்டர்தான் ஹீரோயின் ரோல் மாதிரி. 'அம்மா ஆனதும் என்னை வயசானவங்களா, நரை முடியோடல்லாம் காட்டிடுவாங்களோன்னு கவலைப் படாதீங்க. வரப்போற நாள்கள்ல எனக்காகவே இந்தக் கேரக்டர்ல நிறைய மாற்றங்கள் செய்யப் போறாங்க. அதனால என்னை சின்னத்திரையில் ரிட்டயர்டு ஆகி அம்மா கேரக்டருக்கு வந்துட்டாங்கன்னு எழுதிடாதீங்க. 'குலதெய்வம்' முடிஞ்சதும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமேன்னுதான் நினைச்சேன். ஆனா வந்த இந்த வாய்ப்பை விடவும் மனசில்லை. அதனால சரி சொல்லிட்டேன்'' என்கிறார் ஶ்ரீத்திகா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement