வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (07/05/2018)

கடைசி தொடர்பு:17:25 (07/05/2018)

7 ரூபாய் போதாது; 15 ரூபாய் கொடுங்கள் - விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்த விரிவுரையாளர்கள்

தொழில்நுட்பக் கல்லூரி விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதியம் அதிகரித்து வழங்கக்கேட்டு விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதியம் அதிகம் வழங்கக்கோரி விரிவுரையாளர்கள் தொழில்நுட்பக் கல்லூரி விடைத்தாள் திருத்தும் பணிக்குப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் விடைத்தாள் திருத்தும்பணி புறக்கணிப்பு

பாலிடெக்னிக் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் விரிவுரையாளருக்கு ஒரு விடைத்தாளுக்கு 7 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தை 15 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கேட்டும். விடைத்தாள் திருத்தும்போது நாள் ஒன்றுக்குத் தினப்படியாக 190 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை 400 ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும் எனக் கேட்டும் தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர்கள் விடைத்தாள் திருத்தும்பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, கள்ளியங்காடு மற்றும் பழவிளையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற கல்லூரிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்தனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் கூறுகையில், ``ஊதிய உயர்வு வழங்குவது சம்பந்தமான அரசாணை தயாரிக்கப்பட்டுவிட்டதும் அது நிதி அமைச்சரின் பார்வையிலிருந்து வருகிறது. அரசு ஆணை வெளியானால் உடனடியாகப் போராட்டத்தை விலக்கிக்கொள்வோம். இல்லாதபட்சத்தில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு தொடரும்" என்றனர்.