ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வீடுகளைச் சுற்றிவளைத்த போலீஸார்! | Police arrests Jacto geo organisers in Kanyakumari

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (07/05/2018)

கடைசி தொடர்பு:18:55 (07/05/2018)

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வீடுகளைச் சுற்றிவளைத்த போலீஸார்!

கன்னியாகுமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வீடுகளைப் போலீஸார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ன்னியாகுமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் வீடுகளைப் போலீஸார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரியும் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நாளை (8.5.2018) நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளைப் போலீஸார் கைதுசெய்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பகவதியப்ப பிள்ளை, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நிர்மலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குமரி.மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் வீடுகளைப் போலீஸார் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தியாகராஜன் கூறுகையில், "ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அதிகாலையில் கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், நாங்கள் வீடைவிட்டு வெளியேறிவிட்டோம். இந்த நிலையில் எனது வீட்டை போலீஸார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர். மேலும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீடுகளைப் போலீஸார் முற்றுகையிட்டனர். அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது" என்றார்.