வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (07/05/2018)

கடைசி தொடர்பு:17:14 (07/05/2018)

வங்கியில் புகுந்து ரூ.6 லட்சம் அபேஸ்! சினிமாவை விஞ்சிய துப்பாக்கிக் கொள்ளையர்கள்

கொள்ளை நடந்த வங்கி

மன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்குள் சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சினிமாவை விஞ்சி நடந்துள்ள இந்தக் கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அசேசம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இன்று மதிய உணவு இடைவேளை முடிந்து வங்கி ஊழியர்கள் தங்கள் வேலையைச் செய்துகொண்டிருந்தனர். அப்போது, காரில் வந்த கொள்ளையர்கள் வங்கி மேலாளரின் அறைக்குச் சென்றுள்ளனர். பின்னர், வங்கி மேலாளர் கோவிந்தராஜன் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்களையும் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

பின்னர், வங்கியிலிருந்து 6 லட்சம் பணம் மற்றும் 80 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் கொள்ளையர்கள் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

மெர்க்கன்டைல் வங்கி

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, தப்பியோடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். சினிமாவை விஞ்சும் அளவுக்கு இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.