வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (07/05/2018)

கடைசி தொடர்பு:18:15 (07/05/2018)

காலா படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியானது!

பா.இரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படத்தின் ட்ராக் லிஸ்ட் வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் `காலா'. நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தனுஷின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்திலிருந்து `ஆல்பம் பிரிவ்யூ' என்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 

காலா

இந்த வீடியோவில் `காலா' படம் சொல்லும் கதையை மேலோட்டமாக பா.இரஞ்சித்தும், படத்தில் எந்த மாதிரியான பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது என்று சந்தோஷ் நாராயணனும் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பேசுவதிலிருந்து படம் முழுவதும் அரசியல் பேசியிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. `செம வெயிட்டு' என்று சில தினங்களுக்கு முன்பு, படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியானது. வெளியானபோது சக்கபோடு போட்ட அந்தப் பாடல், இதுவரை 3 மில்லியன் வியூஸ்களைக் கடந்துள்ளது. 

அந்தப் பாடலைத் தொடர்ந்து போராடுவோம், நிக்கல் நிக்கல், கண்ணம்மா, தெருவிளக்கு, உரிமையை மீட்போம், தங்க சேலை, கற்றவை பற்றவை, என மொத்தம் ஒன்பது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. படத்தில் பாடல்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் வருகிறது என்று ரஞ்சித்தும் அந்தப் பாடல்கள் தரும் உணர்வை சந்தோஷ் நாராயணனும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். படம் மட்டுமல்லாமல் ஒரு சில பாடல்களில் இடம்பெற்றிருக்கும் வரிகளும் அரசியல் பேசியிருக்கிறது. 

காலா ட்ராக் லிஸ்ட்

ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உணர்வைக் கடத்தும் என்பது பாடல்களின் சில வரிகளைக் கேட்கும்போதே தெரியவருகிறது. அதுமட்டுமல்லாமல், ஒட்டுமொத்த `காலா' பட ஷூட்டிங் ஸ்பாட்டுமே திருவிழாபோல் தெரிகிறது. பிருந்தா மாஸ்டர், அருண்ராஜா காமராஜா, சமுத்திரக்கனி, கஸ்தூரி, சண்டைப் பயிற்சியாளர்கள், கோரிகிராஃபர்கள் எனப் படத்தில் வேலைபார்க்கும் ஒட்டுமொத்த படக் குழுவுமே என்ஜாய் பண்ணி வேலை பார்க்கிறார்கள். 

 

 

க்யாரே... செட்டிங்கா...