பாரதிய ஜனதா, மார்க்ஸிஸ்ட் கட்சி அரசியலால் மதுவின் தாய் தலைமறைவு!

மதுவின் மரணத்தை அரசியல் நோக்கத்துடன் கேரள கட்சிகள் அணுகத் தொடங்கியுள்ளன.

பாரதிய ஜனதா, மார்க்ஸிஸ்ட் கட்சி அரசியலால் மதுவின் தாய் தலைமறைவு!

கேரளாவில் பாரதிய ஜனதா, மார்க்ஸிஸ்ட் கட்சிகள் செய்யும் அரசியல் காரணமாக மதுவின் தாயார் மல்லி தலைமறைவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

பினராயி விஜயனுடன் மதுவின் தாயார்

கடந்த பிப்ரவரி மாதத்தில் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் அரிசி திருடியதாக மது என்கிற மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளத்தில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன், மதுவின் வீட்டுக்கே வந்து தாயார் மல்லி, சகோதரி அம்பிகா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். கேரள அரசு சார்பில் நிவாரண நிதியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், மதுவின் மரணத்தை வைத்து அட்டப்பாடி பகுதியில் பாரதிய ஜனதா, மார்க்ஸிஸ்ட் கட்சிகள் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளன. அரசியலுக்கு சிறிதும் தொடர்பு இல்லாத அவரின் தாயாரை அரசியல் கட்சி யாத்திரையைத் தொடங்கி வைக்க அழைத்ததால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

கொச்சி அருகேயுள்ள வரபுழா என்ற பகுதியில் மதுவைப் போலவே இன்னொரு இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி அட்டப்பாடியிலிருந்து வரபுழா வரை யாத்திரை நடத்த முடிவு செய்தது. யாத்திரையைத் தொடங்கி வைக்க மதுவின் தாயார் மல்லியைக் கேட்டுக்கொண்டது. மார்க்ஸிஸ்ட் கட்சி தொண்டர்கள், பாரதிய ஜனதா கட்சியின் யாத்திரையைத் தொடங்கி வைக்கக் கூடாது என்று அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, மல்லி அட்டப்பாடியிலிருந்து வெளியேறி அரசியல் கட்சிகள் கண்ணில் படாமல் உள்ளார். 

மதுவின் தாயார் மல்லி காணாமல் போனதற்கு மார்க்ஸிஸ்ட் கட்சிதான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மல்லி இல்லையென்றால் சகோதரி அம்பிகாவை வைத்து யாத்திரையைத் தொடங்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. 'அப்பாவிகளை அரசியலுக்குள் இழுத்து சிரமப்படுத்த வேண்டாம்' என்று அட்டப்பாடி மக்கள் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!