வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (07/05/2018)

கடைசி தொடர்பு:21:20 (07/05/2018)

`இந்த நிலை தொடர்ந்தால் மலைமாடுகளே இருக்காது' - கலெக்டருக்கு சங்கத்தினர் கோரிக்கை

மேற்குத்தொடர்ச்சிமலைப் பகுதிகளில் உள்ள பாரம்பர்ய மேய்ச்சல் நிலங்களுக்கு மலைமாடுகள் செல்ல சமீப ஆண்டுகளாகப் பல்வேறு தடைகளை ஏற்படுத்திவருகிறது தமிழக வனத்துறை. இதனால், 2001 - 2002 காலகட்டங்களில் தேனி மாவட்டத்தில் இரண்டு லட்சமாக இருந்த மலைமாடுகளின் எண்ணிக்கை தற்போது 15,000-க்கும் கீழ் குறைந்துவிட்டது.

மலைமாடு

இது குறித்து பாரம்பர்ய மலைமாடு வளர்ப்போர் சங்கத்தின் தலைவர் கென்னடியிடம் பேசினோம். ``மலை மாடு காட்டுக்குள் இருக்கும் தங்களது பாரம்பர்ய மேய்ச்சல் நிலத்துக்குச் செல்ல வேண்டும் என்றால், வனத்துறையிடம் பாஸ் வாங்க வேண்டும். பாஸ் கொடுக்க, ஒவ்வொரு மாடும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இந்நிலையில், கடும் சோதனைகளைத் தாண்டி பாஸ் வழங்கப்படுமா என்றால், அதுவும் இல்லை. ஆறு மாதம் இழுத்தடித்து பின்னர் வழங்குவார்கள். இந்த நிலை தொடர்ந்தால் தேனி மாவட்டத்தில் மலை மாடுகளே இல்லாத நிலை ஏற்படும். கடந்த வாரம், எங்களது குறைகளைப் புது கலெக்டர் கேட்டறிந்தார். தேனி மாவட்டத்தில் மொத்தம் எத்தனை மலைமாடுகள் உள்ளன என்று பட்டியல் கேட்டார். அதைத் தயாரித்து கொடுத்திருக்கிறோம். வனத்துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்!’’ என்றார்.