சாலைவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்!

சென்னைக் கொளத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு, தொண்டர்கள் உதவியுடன் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

ஸ்டாலின்

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், தனது சொந்தத் தொகுதியான கொளத்தூர் பகுதிக்குச் சென்றிருந்தார். அந்தத் தொகுதியில் நடைபெறும் பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின், மக்களைச் சந்திக்கும் வகையில் திறந்த ஜீப்பில் நின்றபடி பயணித்தார். மேலும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார். 

 

அதன்பின்னர் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் மக்கள் அதிகமாகக் கூடியிருப்பதைக் கண்டு, வண்டியை விட்டு உடனடியாகக் கீழிறங்கினார். மக்கள் கூட்டத்தை விலக்கிப் பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. உடனடியாக தன்னுடன் வந்த தொண்டர்கள் உதவியுடன் ஆட்டோ ஒன்றில் காயம்பட்டவரை ஸ்டாலின், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கியவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஸ்டாலினின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.   
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!