`உயிர் பலி வாங்கிய நீட் வேண்டாம்!’ - பிணம் போல் அமர்ந்து நூதனப் போராட்டம்

உயிர் பலி வாங்கிய நீட் தேர்வை நிரந்தரமாக மத்திய அரசு ரத்து செய்ய வலியுருத்தி 5 பேருக்கு மாலை அணிவித்து, தலையில் கட்டு போட்டு பிணம் போல் நாற்காலியில் அமரவைத்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

உயிர் பலி வாங்கிய  நீட்  தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நெய்வேலியில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்தியக் கலால் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

நெய்வேலி

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வெளி மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்ததால் பல்வேறு இன்னல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். இதுவரை மன உளைச்சலில் மாணவ, மாணவிகளின் பெற்றோர் 3 பேர் உயிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கடலூர் மாவட்டச் செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நெய்வேலி வட்டம் 2ல் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான ஜிஎஸ்டி மற்றும் மத்தியக் கலால் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே திரண்டனர். பின்னர் உயிர் பலி வாங்கிய நீட் தேர்வை நிரந்தரமாக மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி 5 பேருக்கு மாலை அணிவித்து, தலையில் கட்டுப் போட்டு பிணம் போல் நாற்காலியில் அமரவைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரின் இந்த நூதனப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!