Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`குழந்தை கடத்தும் கும்பல் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம்!’ - காஞ்சிபுரம் எஸ்.பி. வேண்டுகோள்

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே குழந்தைகளை கடத்தும் கும்பல் திரிவதாக சமூக வலையதளங்களில் வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சந்தேகப்படுபவர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடந்துவந்தன. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் வடமாநில வாலிபர்கள் குழந்தைகள் கடத்த வந்ததாக சந்தேகம் ஏற்பாட்டால் பொதுமக்கள் யாரும் அவர்களை தாக்க வேண்டாம் என காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குழந்தை கடத்தல்காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி எச்சரிக்கை

கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் கோடை விடுமுறையை பயன்படுத்தி குழந்தைகளை கடந்த வந்துள்ளதாக வாட்ஸ்அப் போன்ற சமூக வலையதளங்களில் வீடியோக்கள் பரவி வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால், வடமாநிலத்தில் இருந்து அதிக அளவில் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவல்களால் அவர்களை கண்டதும் பொதுமக்கள்  தாக்கும் நிலை தற்போது நிலவிவருகிறது. கடந்த சில நாட்களில் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட சம்பவங்களால் காயமடைந்து சிகிச்சசை பெற்றுவருகிறார்கள்.

இந்த நிலையில் , காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வெளியிட்ட அறிக்கையில், “தனிநபர் குழந்தையை பிடிக்க வருகிறார் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். குழந்தை பிடிக்க வருபவர் என்று தீர விசாரிக்காமல் யாரும், யாரையும் அடிக்கவோ துன்புறுத்தவோ வேண்டாம். தங்கள் குழ்தைகளை காணவில்லை என்றால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.  குழந்தைகள் பிடிப்பவர்கள் என்று தவறாக எண்ணி அப்பாவி நபர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என அறிவித்திருக்கிறார். மேலும் இன்று காலைமுதல் ஆட்டோ மூலம் துண்டு பிரசுரங்களை கொடுத்தும், ஒலிபெருக்கி மூலமாகவும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் புகார் தெரிவிக்க காஞ்சிபுரம் மாவட்ட கோட்ட காவல் அலுவலர்களின் மொபைல் எண்கள் அதில் குறிபிடபட்டுள்ளது. புகார் தெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சி காவல் கோட்டம் – 94981 00261 ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டம் – 94981 00262 செங்கல்பட்டு – 94981 00263 மதுராந்தகம் – 94981 00264 மாமல்புரம் – 94981 00265 வண்டலூர் – 94981 00306  காஞ்சி காவல் கட்டுபாட்டு அறை – 044 – 27222000  தனிபிரிவு அலுவலகம் – 044 2723801

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement