நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடந்த நூதன ஆர்ப்பாட்டம்! | Protest against neet exam held in trichy

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (08/05/2018)

கடைசி தொடர்பு:05:00 (08/05/2018)

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடந்த நூதன ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் மீண்டும் வீசத் துவங்கியுள்ளன. நீட் தேர்வு மையங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், அலைக்கழிப்புகள் உள்ளிட்டவை மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கழுத்தில் தூக்குக் கயிறுகளை மாட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மரக்கடை அருகே உள்ள ராமகிருஷ்ணா பாலத்துக்கு கீழ் திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில்,  உயிர்ப்பலி வாங்கிய நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்காததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்ட பேச்சாளர்கள்,  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அப்போது போராட்டக்காரர்கள், தங்கள் கழுத்தில் தூக்குக் கயிறுகளை மாட்டிக் கொண்டு நீட் தேர்விற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க