சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை! நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி

வீட்டுக்கு அருகில் விளையாடிய 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

வீட்டுக்கு அருகில் விளையாடிய 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கூலித்தொழிலாளிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவர், விஜயகுமார் (42). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 6.12.2015  அன்று தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 8 வயது சிறுமியைத் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரைக் கைதுசெய்தார். இதுதொடர்பான வழக்கு, நாகர்கோவில் மகளிர் விரைவு  நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம்,  விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 20  ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று மாலை தீர்ப்பு வழங்கினார். 20 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டத் தவறினால், மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!