Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்' - சி.பி.எஸ்.இ விளக்கம்!

'நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களை மத்திய அரசு திட்டமிட்டுப் பழிவாங்குகிறது' என்ற கோபக்குரல் தமிழகம் முழுவதும் ஒலிக்கிறது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு என்ற பெயரில், நாடு முழுக்க நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே இத்தேர்வு முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தது தமிழகம். 'நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்' என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்தது. ஆனால், இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் புறந்தள்ளப்பட்டு, கட்டாய நீட் தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை (6-5-2018) நடைபெற்ற தேர்வுக்கு, ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதால், மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கேரளாவுக்குத் தேர்வு எழுதச் சென்ற கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தமிழ் மாணவர்களுக்கு இந்தி மொழியிலான வினாத்தாள், போலி ஹால் டிக்கெட் விவகாரம் எனப் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. 

இந்நிலையில், இந்த நீட் தேர்வு குளறுபடிகள் அனைத்துக்கும் விளக்கம்கொடுக்கும் விதமாக, சி.பி.எஸ்.இ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'இந்தியா முழுவதும் நீட் தேர்வுக்காக 2,255 மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 13,26,725 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இதில், 10,60,923 பேர் ஆங்கிலத்தில் தேர்வு எழுதியுள்ளனர். 24,720 பேர் தமிழில் எழுதியுள்ளனர். 

நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. தமிழில் படித்த மாணவர்களுக்குத் தமிழகத்திலேயேதான் மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ராஜஸ்தானில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மாணவர்கள், அவர்கள் விருப்பப்பட்டே அந்தத் தேர்வு மையத்தைத் தேர்வுசெய்துள்ளனர். அவர்களின் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அதைத்தான் உறுதிசெய்கிறது. சுமார் 4 சதவிகிதம் பேர் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலமாகத் தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தது. 4 மையங்களில் மட்டும் தேர்வு தாமதமாகத் தொடங்கியது. அதற்கும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது' என்று விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement