வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (08/05/2018)

கடைசி தொடர்பு:12:10 (08/05/2018)

`இந்தியாவிலேயே உங்க அரசுதான் சிறந்த அரசு' - கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு!

கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் நன்றி

`இந்தியாவிலேயே உங்க அரசுதான் சிறந்த அரசு' - கேரள முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பாராட்டு!

நீட் தேர்வு எழுத தமிழகத்திலிருந்து கேரளா சென்ற மாணவர்களுக்குப் பல விதங்களில் உதவியாக இருந்த கேரள அரசுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் சமூக வலைதளங்கள் வழியாக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

pinarayi

தமிழகத்திலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத கேரளா சென்றனர். எர்ணாகுளத்தில் அதிகபட்சமாக 500 தமிழக மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்திலிருந்து தேர்வு எழுத கேரளாவுக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு உதவி புரிய ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உதவி மையங்களைக் கேரள அரசு அமைத்திருந்தது. போக்குவரத்துக்கும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

`தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து வரும் மாணவர்கள் எந்தவிதத்திலும் சிரமத்தை சந்தித்துவிடக் கூடாது, உரிய ஏற்பாடுகளை ஆவண செய்யுங்கள்' என்று மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். தமிழகப் பிரிவு  மார்க்ஸிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கேரள முதல்வரிடம் உதவி புரிய வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்தே, கேரள முதல்வர் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.

நீட் 

தற்போது, நீட் தேர்வு சிறப்பாக எழுதிய தமிழக மாணவர்கள் கேரள அரசுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். `இந்தியாவிலேயே கேரள அரசுதான் சிறந்த அரசு’ என்று முதல்வர் பிரனாயி விஜயனுக்கு மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த 'அம்மா' திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா பங்கேற்றார். விழாவில் பேசிய நடிகர் சூர்யா, ''தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத கேரளா வந்த மாணவர்களுக்கு உதவியாக இருந்த அன்பு நிறைந்த கேரள மக்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துகொள்கிறேன்'' என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க