காவிரி பிரச்னைக்கிடையே கர்நாடகாவில் தமிழிசை தீவிர பிரசாரம்!

காவிரி பிரச்னைக்கிடையே கர்நாடகாவில் தமிழிசை தீவிர பிரசாரம்!

ர்நாடக மாநிலத்தில் வரும் 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாவும் களத்தில் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. கருத்துக் கணிப்புகள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்கின்றன. அதனால், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் உதவி இருந்தால் மட்டுமே தேசியக் கட்சிகள் கர்நாடகத்தில் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் நிலவுகிறது. எனினும், கடைசி கட்ட பிரசாரம் வழியாகப் பாரதிய ஜனதா கட்சி கூடுதல் தொகுதிகளை கைப்பற்றலாம் என்று பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. தொடர்ந்து, அனைத்து மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் கர்நாடகத்தில் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழிசை

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் கர்நாடகத்தில் முகாமிட்டுள்ளார். பெங்களூரில் நேற்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழிசை தீவிர பிரசாரம் செய்தார். பெங்களூரில் தமிழர்கள் லட்சக்கணக்கில் வசிப்பதால் தமிழிசையின் பிரசாரம் உதவியாக இருக்கும் என்று பாரதிய ஜனதா கட்சி தலைமை நம்புகிறது. காந்திநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார். 

காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில், தமிழிசை கர்நாடக மாநிலம் சென்று பாரதிய ஜனதா கட்சிக்காக வாக்கு சேகரிப்பது 'எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது'போல உள்ளதாகச் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'காவிரி கர்நாடகத்துக்கு உரிமையானது என்றுதானே கர்நாடகத்தில் பேசுவீர்கள்' என்றும் 'தன் வீட்டை ஒழுங்காகப் பராமரிக்காமல் ஊரை பராமரிப்பதுபோல தமிழிசையின் செயல்பாடுகள் உள்ளது' என்வும் சமூகவலைத்தளங்களில் தமிழிசை விமர்சிக்கப்பட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!