சென்னையில் நாளை 'காலா' படத்தின் ஆடியோ வெளியீடு!

'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவிருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காலா'. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கிறது.

காலா

இந்நிலையில், 'செம வெயிட்டு' என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி மூன்று மில்லியன் வியூஸ்களைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 'ஆல்பம் பிரிவ்யூ' வீடியோவை வெளியிட்டார். அதற்கும் இணையத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'காலா' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை 6.30 மணிக்கு ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. 

காலா

அந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைக்குழு படத்தில் உள்ள பாடல்களை இசையமைத்து பாட இருக்கிறார்கள். அதேபோல, பிருந்தா, சாண்டி ஆகியோர் தங்களது நடனக்குழுவுடன் படத்தின் பாடல்களுக்கு நடனமாட இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மிக பிரமாண்டமாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், சினிமாத்துறை சார்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொள்கிறார்கள். ஆக, நாளை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் விழாக்கோலாமாக ஜொலிக்க இருக்கிறது. இந்நிலையில், நாளை மேடையில் ரஜினி கட்சி அறிவிப்பு பற்றியும் தற்போதுள்ள அரசியல் சூழல் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!