Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

`முதல்வருக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஏற்றுவோம்' - கொந்தளிக்கும் தூத்துக்குடி வணிகர்கள்

தூத்துக்குடியில் வர்த்தகர் சங்கத் தலைவர் வீட்டில் கல் வீசியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி வியாபாரிகள் மத்திய பாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

வணிகர்கள் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மார்ச் 24-ம் தேதி தூத்துக்குடியில் பல ஆயிரக்கணக்கில் மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்ட ஆர்ப்பாட்டத்தை வணிகர்கள் சங்கத்தினர்தான் முன்னின்று நடத்தினர். இதில், மத்திய சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரம் காட்டி வருகிறார். தூத்துக்குடி சிவன் கோயில் தெருவில் உள்ள விநாயகமூர்த்தியின் வீட்டில், நேற்று இரவு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென கல் வீசித் தாக்கினர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இது குறித்து, தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த வணிகர்கள், ஸ்டெர்லைட் ஆலையின் அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில்தான் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் வணிகர்கள் ஈடுபட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தக சங்கச் செயலாளர் பாஸ்கர், “ ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களில் வியாபாரிகள் சங்கத்தினரின் போராட்டமும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அடுத்தடுத்து ஆலைக்கு எதிரான தொடர்போராட்டங்களில் ஈடுபடுவது எனவும், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வணிகர்கள் மாநாட்டில்கூட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என்றுதான் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வணிகர் சங்கத் தலைவர் வீட்டின்மீது தாக்குதலில் ஈடுபடத் தூண்டிய ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் ஸ்ரீதர், கனிஷியஸ், சுகந்தி ஆகியோரை கைது செய்ய வேண்டும்.

இவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும்,  கோவில்பட்டிக்கு வரும் 11-ம் தேதி பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்களது போராட்டத்தை தெரிவிக்கும் வகையில் முழுக் கடையடைப்பு நடத்தி, அனைத்துக் கடைகளிலும் கறுப்புக்கொடி ஏற்றிடுவோம். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி வணிகர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும்” என்றார். வணிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement