சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதியை அரசு ஏற்று நடத்த வேண்டும்!

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என அகில உலக அய்யாவழி சேவை அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் பதியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என அகில உலக அய்யாவழி சேவை அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.

 அகில உலக அய்யாவழி சேவை அறக்கட்டளை தலைவர் சிவபிரகாஷ், செயலாளர் சுரேஷ் ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்

திருநெல்வேலியைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் அகில உலக அய்யாவழி சேவை அறக்கட்டளை தலைவர் சிவபிரகாஷ், செயலாளர் சுரேஷ் ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ``அய்யா வைகுண்டர் நாராயணரின் அவதாரம். அய்யா வைகுண்டர் சாமித்தோப்பு பதி, அம்பலப்பதி, வாகைப்பதி, முட்டப்பதி, பூப்பதி என ஐந்து பதிகளை ஏற்படுத்தினார். அய்யா வழி என்பது இந்து சமயம்தான். இஸ்லாமியர்களுக்குக் குரான், கிறிஸ்தவர்களுக்குப் பைபிள் போன்று அய்யாவழி பக்தர்களுக்கு அகிலத் திரட்டு என்பது புனிதநூல். அந்த அகில திரட்டில் முத்துக்குட்டி என்ற வார்த்தையே இல்லை. ஆனால், இன்று சாமித்தோப்பு பதியை நிர்வகிப்பவர்கள் அது தங்கள் முன்னோருடைய சமாதி எனக் கூறுகிறார்கள். அவருடைய ஆறாவது தலைமுறை எனவும் கூறுகிறார்கள். மற்றொருவருடைய தாத்தாவையும், சமாதியை வழிபட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அய்யா வைகுண்டர் நாராயணரின் அவதாரம் என கோர்ட் கூறியிருக்கிறது. எனவே, கோர்ட் உத்தரவுப்படி சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும். ஆனால், அரசியல் நோக்கத்தோடு சிலர் செயல்படுகிறார்கள். சாமித்தோப்பு அய்யா வைகுண்டரின் கோயில்தான்.

 அகில உலக அய்யாவழி சேவை அறக்கட்டளை தலைவர் சிவபிரகாஷ், செயலாளர் சுரேஷ் ஆகியோர் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்

அதை தலைமைப்பதி எனச் சிலர் கூறுவது தவறு. அதுபோன்று கோயிலை அரசு நடத்தினால் வழிபாட்டு முறையை மாற்றிவிடுவார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் அந்தக் கோயில் ஆகமப்படிதான் வழிபாடு நடத்துகிறார்கள். அம்மன் கோயிலில் அந்த வழியில்தான் பூஜை நடத்துகிறார்கள். அதுபோன்று அய்யா வைகுண்டர் கோயிலிலும் அந்த வழிப்படிதான் வழிபாடு நடத்துவார்கள். சாமித்தோப்பு அய்யா கோயிலில், இப்போது சரியான பாதுகாப்பு இல்லை. கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. சிலர் சாமித்தோப்பு பதியை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

அய்யா வழிக்குள் நாத்திகம் பேசும் சீமானுக்கு என்ன வேலை. அய்யா வைகுண்டர் நாராயணின் அவதாரம் என பாலபிரஜாதிபதி ஏன் சொல்ல வேண்டும். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேறாமல் இருந்தால் அரசு கோயிலைக் கையகப்படுத்த வேண்டும் என சாமித்தோப்பில் விரைவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!