வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (08/05/2018)

கடைசி தொடர்பு:19:00 (08/05/2018)

கேரளாவில் அடுத்தடுத்து நடந்த அரசியல் கொலைகள்! பதற்றத்தில் கண்ணூர்

மாஹியில் சி.பி.எம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கண்ணூர் மற்றும் மாஹியில் இன்று பந்த் நடந்தது.

மாஹியில் சி.பி.எம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கண்ணூர் மற்றும் மாஹியில் இன்று பந்த் நடந்தது.

கொலை செய்யப்பட்ட சி.பி.எம். பாபு

கேரள மாநிலத்தில் அரசியல் கொலைகள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக சி.பி.எம் மற்றும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினரிடையே அடிக்கடி மோதல்களும் கொலைகளும் நடப்பது வழக்கம். இந்த நிலையில் கேரள மாநிலம் மாஹியில் சி.பி.எம் கமிட்டி உறுப்பினர் பாபு நேற்று இரவு சுமார் 9.15 மணியளவில் பைக்கில் வீட்டுக்குச் செல்லும் வழியில் ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை அங்கிருந்த சிலர் மீட்டு தலசேரி இந்திராகாந்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட  ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஷமேஜி

இதைத் தொடர்ந்து இரவு சுமார் 10 மணியளவில் மாஹி பெருஞாடி ரோட்டில் வைத்து ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஷமேஜி என்பவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. ஆட்டோ டிரைவரான அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ்க்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த இரண்டு கொலைகள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு நடந்த இந்த இரண்டு கொலைகளால் கண்ணூர் மற்றும் மாஹி பகுதியில் சி.பி.எம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் இன்று பந்த் நடத்தப்பட்டு வருகிறது.