`மணல் கடத்தலுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை!’ - உயர் நீதிமன்றம் அதிரடி | madras high court order to arrest the officers who were involving sand smuggling

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (08/05/2018)

கடைசி தொடர்பு:17:03 (08/05/2018)

`மணல் கடத்தலுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை!’ - உயர் நீதிமன்றம் அதிரடி

மணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாடு மணல் கடத்தல்காரர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனால் மணல் கொள்ளை தமிழகம் முழுவதும் படு ஜோராக நடைபெற்றுவருகிறது. கொள்ளை தொடர்பாகப் புகார்கள், போராட்டங்கள் எனத் தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மணல் கொள்ளைக்கு அதிகாரிகளும் துணைபோகிறார்கள் என பல காலமாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். மேலும் நேற்று நெல்லையில் காவலர் ஜெகதீசன் துரை மணல் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மணல் கடத்தல் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அதை விசாரித்த உயர் நீதிமன்றம், ``அரசு அதிகாரிகள் உடந்தை இல்லாமல் மணல் கடத்தல் சாத்தியமாகாது. மணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகத் தெரியவந்தால் அவர்கள்மீது துறைரீதியாகத் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர் சட்டம் தொடர்பாக அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் ஒரு வாரத்தில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க