வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (08/05/2018)

கடைசி தொடர்பு:19:40 (08/05/2018)

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி!

ராகவா லாரன்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 5 லட்ச ரூபாய் நிதி உதவி கொடுத்து உதவியுள்ளார்.

இரு வாலிபர்கள் சேர்ந்து, குழந்தைக்கு உதவி வேண்டி ஒரு வீடியோவைப் பதிவிட்டிருக்கின்றனர்.

ராகவா லாரன்ஸ் நிதியுதவி

மதுரையைச் சேர்ந்த சவிகா ஶ்ரீ எனும் குழந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. வலியை வெளியில் சொல்ல முடியாத அந்தக் குழந்தையின் பெற்றோர், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மருத்துவர்கள், காப்பாற்றுவது கஷ்டம் எனத் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும், சிகிச்சைக்குக்கூட பணம் இல்லாமல் இருப்பது இவர்களுக்குத் தெரியவந்திருக்கிறது. அதற்காகவே இந்த வீடியோவைப் பதிவிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். இருவரும், பாதிக்கப்பட குழந்தையின் வீட்டில் நேரடியாகவும் பேசியிருக்கிறார்கள் என்றும் சொல்லியிருக்கிறார்கள். 

மேலும், ராகவா லாரன்ஸ், அஜித், விஜய், ஆர்.ஜே.பாலாஜி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் எனப் பல நடிகர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களிடம் உதவி கேட்டுள்ளார்கள். இந்த வீடியோவைப் பார்த்த ராகவா லாரன்ஸ் அதிர்ச்சியடைந்து பாதிக்கப்பட்ட குழந்தைக்காக 5 லட்சம் ரூபாய் நிதியாக, மௌனம் ரவி என்பவரிடம் கொடுத்திருக்கிறார். சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் பேசினால் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், நபரின் போன் வெகு நேரமாக அணைத்து வைக்கப்பட்டிருப்பதால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் மௌனம் ரவி தெரிவித்திருக்கிறார். மௌனம் ரவியைத் தொடர்புகொள்ளும் எண் - 9841014895.