வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (08/05/2018)

கடைசி தொடர்பு:21:03 (08/05/2018)

யாழ்தேவி, நீலகிரி ரயில்களுக்கு `கார்டியன் ' பத்திரிகை தந்த கௌரவம்!

யாழ் தேவி, நீலகிரி குட்டி ரயிலுக்கு கார்டியன் அளித்த அங்கீகாரம்

யாழ்தேவி, நீலகிரி ரயில்களுக்கு `கார்டியன் ' பத்திரிகை தந்த கௌரவம்!

லகின் தலை சிறந்த ரயில் வழித்தடங்களில் யாழ்தேவி மற்றும் நீலகிரி மலை ரயில்கள் இடம் பிடித்துள்ளன. 

நீலகிரி மலை ரயில்

லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற `கார்டியன் ' பத்திரிகை உலகின் தலைசிறந்த 18 ரயில் வழித்தடங்களை வகைப்படுத்தியுள்ளது. அதில், யாழ்ப்பாணத்திலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்குச் செல்லும் யாழ்தேவி இடம் பெற்றுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு மீண்டும் இந்தச் சேவை  2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களையும் இணைக்கும் இந்த பாதை 314 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இலங்கையின் கலாசாரம் மற்றும்  பண்பாட்டு அடையாளமாகவும் இது  ரயில் பார்க்கப்படுகிறது. இதில், பயணிக்க 30 நாள்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். தமிழ் கலாசாரத்தை வெளிநாட்டினர் அறிந்து கொள்ள யாழ்தேவி உதவிகரமாக இருப்பதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது. 

யாழ் தேவி  சேவை

பட்டியலில் தமிழகத்தில் அடையாளமாகப் பார்க்கப்படும் நீலகிரி மலை ரயிலுக்கும் இடம் கிடைத்துள்ளது. 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்தப் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுர் வரை செங்குத்தான மலைப் பாதையில் பல் சக்கர உதவியுடன் மேல் ஏறுகிறது. மலை ஏற நிலக்கரி இன்ஜீன் பயன்படுத்தப்படுகிறது. குன்னுரிலிருந்து உதகைக்கு பர்னஸ் ஆயில் இன்ஜீன் மூலம் இயக்கப்படுகிறது 250 பாலங்கள், 200க்கும் மேற்பட்ட வளைவுகள் 16 சுரங்கப்பாதைகள் கொண்ட இந்தப் பாதை தேயிலைத் தோட்டங்கள் , அடர்ந்த காடுகள், அருவிகளைக் கடந்து செல்கிறது. 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ பாரம்பர்யச் சின்னமாக நீலகிரி மலை ரயில் அறிவிக்கப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க