வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (08/05/2018)

கடைசி தொடர்பு:20:40 (08/05/2018)

இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் நயன்தாரா!

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார்.

நயன்தாரா

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துத் தருவதாக சிவகார்த்திகேயன் தரப்பில் பேசி முடிவாகி இருந்தது. ஆனால், அந்த கமிட்மென்ட் மட்டும் நிறைவேறாமலேயே இருந்தது. தற்போது பேசியபடி ஞானவேல் ராஜாவுக்குப் படம் நடித்துத் தர சிவகார்த்திகேயன் முன்வந்துள்ளார். அந்தப் படத்தை இயக்குநர் ராஜேஷ் இயக்குகிறார். முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'வேலைக்காரன்' படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி நடிக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. வேலைக்காரன் படத்தில் இருவருடைய கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனதையடுத்து மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் படத்தில் பணியாற்றவுள்ள டெக்னிஷியன்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க