வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (08/05/2018)

கடைசி தொடர்பு:20:58 (08/05/2018)

`மக்கள் என்னைப் போராளி என்கிறார்கள்!’ - டிராஃபிக் ராமசாமி படத்தின் டீசர்

சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரிலேயே படமாக வெளிவர இருக்கிறது. அதில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார்.

க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். விகடனின் வெளியான `ஒன் மேன் ஆர்மி' புத்தகத்தைப் படித்தபின்தான், இந்த யோசனை வந்தது என எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ரோகிணி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், கஸ்தூரி எனப் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டுள்ளார். 73 வயதிலும் ஒரு படத்துக்காகச் சேற்றுக்குள் புரண்டு, கீழே விழுந்து எனத் தன் முதுமையையும் மீறி எஸ்.ஏ.சந்திரசேகர், பல காட்சிகளில் மெர்சல் காட்டியிருப்பது இந்த டீசரில் தெரிகிறது. இன்றைய அரசியல் சூழலில் இந்தப் படம் வெளியாவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க