வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (09/05/2018)

கடைசி தொடர்பு:08:08 (09/05/2018)

இன்றுடன் முடியும் நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல்! ஜாமீன் கிடைக்குமா?

மதுரை  சிறையில் இருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவியின் 15 நாள் நீதிமன்றக் காவல் இன்று நிறைவடைகிறது!

மதுரை சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவியின் 15 நாள் நீதி மன்றக் காவல் இன்றுடன்  முடிவடைவதால், அவரை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று அழைத்துவருகிறார்கள். 

நிர்மலா தேவி

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளைத்  தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயன்ற ஆடியோ, தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கியது. இதன் மூலம் உயர் கல்வித்துறை, பல்கலைக்கழகங்களில்  நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்  வெளியே வந்தன.

இந்த நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து பேராசிரியை நிர்மலாதேவி, காமராசர் பல்கலைக்கழக  உதவிப் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரைக்  கைதுசெய்து, கஸ்டடியில் எடுத்து விசாரித்த பின் சிறையில் அடைத்தனர்.  அதன் பின்னர், ஆளுநர் நியமித்த சந்தானம் விசாரணைக் குழுவினரும் இவர்களை விசாரித்துவந்தனர். இந்த வழக்கு, இந்த மூவரின் கைதுக்குப் பிறகு ஒரு அடி கூட நகராமல் நிற்கிறது. இந்த நிலையில், நிர்மலாதேவியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவதால், அவர் இன்று விருதுநகர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுகிறார். நிர்மலா தேவி தரப்பில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே நேரம், அவரிடம்  விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி மேலும் கால அவகாசம் கேட்க உள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க