வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:08:02 (09/05/2018)

``மேலாண்மை வாரிய நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது” – அமைச்சர் கடம்பூர் ராஜு

”ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி பெற்றதைப்போல் தமிழர் உரிமைப் போராட்டமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டத்திலும் மாநில அரசு நிச்சயம் வெற்றி பெறும்.” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

``ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றிபெற்றதைப்போல, தமிழர் உரிமைப் போராட்டமான காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்கும் போராட்டத்திலும் மாநில அரசு நிச்சயம் வெற்றிபெறும்” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வரும் 11-ம்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, கோவில்பட்டி 2 -வது குடிநீர் திட்டம் மற்றும் முடிவுற்ற பணிகளை துவக்கிவைக்கிறார்.  இந்த விழாவுக்காக,  மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம்  பேசுகையில், ``வரும் 11-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், 2-வது குடிநீர் திட்டம் மற்றும் மாவட்டம் முழுவதும் ரூ.128 கோடியில் முடிவடைந்த திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.

அதிலும், தமிழகத்தில் முதன் முறையாக மானாவாரி விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் இல்லாமல் அரசுக்கு மார்க்கெட்டிங் கமிட்டி மூலம் உளுந்து விற்பதற்கான திட்டத்தைத் தொடங்கிவைக்க உள்ளார். காவிரி  மேலாண்மை பிரச்னையில் மத்திய அரசு நீதிமன்றத்தில் என்ன வாதம் வைத்தாலும் இறுதி முடிவை நீதிமன்றம்தான் எடுக்க வேண்டும்.  மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.  ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி பெற்றதைப்போல தமிழர் உரிமைப் போராட்டமான காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்கும் போராட்டத்திலும் மாநில அரசு நிச்சயம் வெற்றிபெறும்.

தி.மு.க., ஆட்சிக் காலத்தில்தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு  இருந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில், காவலர் ஒருவர் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. அ.தி.மு.க அரசு, என்றுமே காவல் துறையினரை பாதுகாக்கும் அரசாகத்தான் இருந்துவருகிறது. கோவில்பட்டிக்கு வரும் முதல்வருக்கு சிலர் கறுப்புக்கொடி காட்டப்போவதாகத் தெரிவித்துள்ளனர். முதல்வர், கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவில்லை. மக்கள் நலத்திட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் வருகிறார். எனவே, முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டுபவர்களைக் காவல்துறை பார்த்துக்கொள்ளும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க