வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2018)

கடைசி தொடர்பு:07:48 (09/05/2018)

ரயில்வே தொழிலாளர்களின் நாடு தழுவிய 60 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

ரயில்வே பாதைப்  பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்க ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது

நாடு தழுவிய உண்ணாவிரதம்

ரயில்வே பாதைப்  பராமரிப்புப் பணியைத் தனியாருக்கு வழங்க ரயில்வே துறை முடிவெடுத்துள்ளதை எதிர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய  60 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கியுள்ளார்கள். 

நேற்று, மதுரையில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம், ரயில்வே மஸ்தூர் யூனியனின் மதுரை கோட்டத்தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ரபீக் தலைமையில் நடந்தது. இந்தப் போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள், 'மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் துறையாக மாற்ற முயன்றுவருகிறது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும், ரயில்வே பள்ளி, ரயில்வே மருத்துவமனையைத் தனியாருக்கு மாற்றக் கூடாது, திருச்சி - ராமேஸ்வரம் இடையேயான ரயில்வே பராமரிப்புப் பணியைத் தனியாருக்கு வழங்கியதை ரத்துசெய்ய வேண்டும், ரயில்வே பாதை பராமரிப்புப் பணியைத் தனியாரிடம் வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பேசினார்கள். நேற்று தொடங்கிய 60 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை என்றால், அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடர உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க