'விஸ்வாசம்' படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்த  ரோபோ ஷங்கர் | ajith Viswasam shooting pic

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (09/05/2018)

கடைசி தொடர்பு:14:47 (09/05/2018)

'விஸ்வாசம்' படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்த  ரோபோ ஷங்கர்

அஜித்துடன் முதன்முதலாக இணையும் ரோபோ ஷங்கர்

சிவா இயக்கத்தில் நான்காவது முறையாகக் களமிறங்கியுள்ளார் அஜித்குமார். வடசென்னையை கதைக் களமாகக் கொண்ட 'விஸ்வாசம்' படத்தில், அஜித் போலீஸ் கதாபாத்திரம் ஏற்கிறார் எனச் செய்திகள் வலம்வருகின்றன. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில், கடந்த மே 7-ம் தேதி ஷூட்டிங் தொடங்கியது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கோச்செல்லா இசை நிகழ்ச்சியைக்  காணச் சென்றிருந்த நயன்தாராவும் தற்போது இந்தப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

விஸ்வாசம்

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 25 நாள்கள் நடக்கவிருக்கிறது. பாடல் காட்சி, சண்டைக்காட்சி என முதல் ஷெட்யூலில் அடங்கும். இதற்கிடையே, அஜித் படத்தில் முதன் முறையாக நடிக்கும் ரோபோ ஷங்கர், படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. "எது, என்னவானாலும் பரவாயில்லை, அஜித் சாரைப் பார்த்தவுடனே கட்டிப்பிடிச்சு ஒரு செல்ஃபி எடுக்கணும்''னு சொன்னீங்களே... அந்த போட்டோவ சீக்கிரம் அனுப்புங்க பாஸ்.