ஊதிய உயர்வு கேட்டு மறியலில் ஈடுபட்ட அரசு ரப்பர் கழக ஊழியர்கள் கைது!

2016 ம் ஆண்டுக்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக ஊழியர்கள் 263 பேர் கைது செய்யப்பட்டனர்.

2016 ம் ஆண்டுக்குப் பிறகு ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழக ஊழியர்கள் 263 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரப்பர் கழக ஊழியர்கள் சாலை மறியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக சுமார் 4000 ஹெக்டெர் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இதில் சுமார் 1800 நிரந்தர ஊழியர்கள் உட்பட 2500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு 2016 ம் ஆண்டிலிருந்து சம்பளம் உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக 27 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டவில்லை. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலையில் நடந்த பேச்சுவார்த்தையில், 10 நாள்களுக்குள் சம்பள உயர்வு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், 90 நாள்கள் ஆகியும் இதுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. சம்பள உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாகச் சம்பள உயர்வை அமல்படுத்தக்கோரியும் அரசு ரப்பர்கழக அனைத்துச் சங்க ஊழியர்கள் இன்று வேலைக்குச் செல்லாமல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. எம்.எல்.ஏ -க்கள் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலை மறியல் போராட்டம் நடத்திய 263 தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!