வாயில் கறுப்புத்துணி... கையில் பதாகை... சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஊட்டி தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நிரந்தர ஊழியர்கள் கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நிரந்தர ஊழியர்கள் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். 

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பண்ணைப் பணியாளர்கள் தொடர்ந்து 7 நாள்களாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா வளாகத்தில் வாயில் கறுப்பு ரிப்பன் கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கலெக்டர் இன்னசென் திவ்யா மற்றும் எஸ்.பி.முரளி ரம்பா ஆகியோர் போராட்டக்காரர்களிடம்,  இப்பிரச்னை தொடர்பாக அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தனர். ஆனாலும், தினக் கூலி தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றி வரும் நிரந்தரப் பணியாளர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் பணி ஓய்வு வயதை
60 ஆக உயர்த்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட குடும்ப நல நிதி பிடித்தங்களைத் தொடர வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு இணையான ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட சி.பி.எஸ், ஜி.பி.எப், சந்தாவை ஊதியத்தில் பிடிக்க வேண்டும், கல்வித் தகுதிக்கு ஏற்ப வேளாண்மை மற்றும் அதன் சகோதர துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களில் பதவி உயர்வில் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து நிரந்தரப் பணியாளர்கள் கூறுகையில், “10 ஆண்டுகள் தொடர்ந்து அரசு தாவரவியல் பூங்காவில் பணியாற்றியதை அடுத்து, கடந்த 2007-ம் ஆண்டு நாங்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டோம். பணி நிரந்தரம் செய்யப்பட்டாலும் எங்களுக்கு அரசு சார்பில் வழங்க வேண்டிய எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. சிறப்பு காலமுறை ஊதியத்தை மட்டுமே வழங்கி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யப்பட்ட பிறகு, சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து கால முறை ஊதியம் வழங்கப்படவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!